மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த மாணிக்க மூர்த்தி மகன் தினேஷ்(32) என்பவர் மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாடிப்பட்டி டெம்பிள் சிட்டி ஹோட்டல் அருகே நேற்று தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு போன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 இளைஞர்கள் அவரை தாக்கி அவரது செல்போன் மற்றும் ரூ. 500 பணத்தையும் பறித்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணையில் கருணாமூர்த்தி(18), சிவமணி (17), ஐயப்பன்(22) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.