திருமணமானவருடன் இளம்பெண்ணுக்கு காதல்.. இறுதியில் சோகம்!

10293பார்த்தது
திருமணமானவருடன் இளம்பெண்ணுக்கு காதல்.. இறுதியில் சோகம்!
உத்தரப்பிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்ராம் சிங் (25) என்பவர் ஏற்கனவே திருமணம் ஆனவர்.
இவரது மனைவி பிப்ரவரி மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் சிறைக்கு சென்ற விஸ்ராம் ஒரு வாரத்திற்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். விஸ்ராம் சிங்குக்கு திருமணத்திற்கு முன் நேஹா (18) என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது. இதனிடையே நேஹாவுக்கு வேறொருவருடன் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர். நேற்று செவ்வாய்க்கிழமை, விஸ்ராம் மற்றும் நேஹா இருவரும் தங்கள் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி