கழிவறை கோப்பையில் உணவு!... முகம் சுழிக்க வைக்கும் உணவகம்!

60பார்த்தது
கழிவறை கோப்பையில் உணவு!... முகம் சுழிக்க வைக்கும் உணவகம்!
தைவான் நாட்டில் கழிப்பறையை கருப்பொருளாக கொண்ட உணவகம் உள்ளது. 260 சதுர மீட்டர் பரப்பளவுக் கொண்ட இந்த மூன்று அடுக்கு உணவகத்தில் உள்ள அனைத்தும் கழிப்பறை அறை அல்லது குளியலறையில் உள்ள பொருட்களை அடிப்படையாகக் கொண்டவை. உண்மையான கழிப்பறையில் நாற்காலி, உணவுகள் பிளாஸ்டிக் மினியேச்சர் டாய்லெட் கிண்ணங்களில் பரிமாறப்படுகின்றன. மேலும், சிறு சிறுநீர் கழிப்பறைகளில் பானங்கள் வழங்கப்படுகின்றன. முகம் சுழிக்க வைக்கும் இந்த உணவகம் 3 கிளைகளுடன் வெற்றிகரமாக இயங்குவதுதான் மற்றொரு சுவாரஸ்யமாகும்.

தொடர்புடைய செய்தி