18-வது மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் தமிழ்நாட்டில் இன்றுடன் முடிவடைவதையொட்டி அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இன்று அவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ நடத்திய நிலையில் தொண்டர்கள் உற்சாகமாக கலந்துக் கொண்டனர்.