நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் அடிக்கடி வனவிலங்குகள் வருவது வழக்கம். யானை, கரடி, சிறுத்தை போன்றவை ஊருக்குள் வந்து பொதுமக்களை அச்சுறுத்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜூலை 1) இரவு ஊருக்குள் வந்த சிறுத்தைப்புலி ஒன்று ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவருக்குள் புகுந்து மேலே கட்டிவிடப்பட்டிருந்த பூந்தொட்டியுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு வீட்டின் வெளியே கழற்றி விடப்பட்டிருந்த ஒரு ஜோடி செருப்பில் ஒரு செருப்பை மட்டும் கவ்விக்கொண்டு ஓடியது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.