உலக அளவில் வாழத் தகுதியற்ற சில நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பொருளாதரம், காலநிலை, பஞ்சம், வன்முறை, போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஒரு நாடு மக்கள் வாழத் தகுதியற்ற நிலமாக மாறுகிறது. அந்த வகையில், சிரியாவின் டமாஸ்கஸ், லிபியாவின் திரிபோலி, அல்ஜீரியாவின் அல்ஜியர்ஸ், நைஜீரியாவின் லாகோஸ், பாகிஸ்தானின் கராச்சி, வங்கதேசத்தின் டாக்கா, ஜிம்பாப்வேயின் ஹராரே, பப்புவா நியுகினியாவின் போர்ட் மோர்ஸ்பி, உக்ரைனின் கியேவ், வெனிசுலாவின் கராகஸ் ஆகிய நகரங்கள் வாழத் தகுதியற்ற இடங்களாக மாறிவிட்டன.