ஆளுநர் வாசிக்காத உரையை படிக்கும் சபாநாயகர்

56பார்த்தது
ஆளுநர் வாசிக்காத உரையை படிக்கும் சபாநாயகர்
ஆளுநர் உரையுடன் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில்,
அரசு தயாரித்தது வழங்கிய உரையை ஆளுநர் படிக்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், தேசிய கீதம் இசைக்கப்படாமல் அதற்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை எனக்கூறி நிறைவு செய்தார். தமக்கு அளிக்கப்பட்ட உரையில் உள்ள கருத்துக்களுடன் முரண்படுவதாக ஆளுநர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து, ஆளுநருக்கு வழங்கப்பட்ட உரையின் மீதியை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார். சபாநாயகருக்கு அருகில் தனி இருக்கை ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த பேரவை கூட்டத்தொடரில் ஏற்பட்ட கருத்து முரண் காரணமாக பாதியிலேயே ஆளுநர் வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.