கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் மலையாண்ட அல்லி ஊராட்சி வேங்கைநகரில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும் பணிகளையும் குடிநீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. எம். சரயு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு சரியாக பராமரிக்காத காரணத்தினால் மலையாண்ட அல்லி ஊராட்சி செயலர் சின்னசாமி என்பவரை மாவட்ட ஆட்சித் தலைவர் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
ஏற்கனவே அனைத்து துறை அலுவலர்களுக்கும் ஊரக வளர்ச்சி நகராட்சி பேரூராட்சி அலுவலர்களுக்கும் மாவட்டம் முழுவதும் குடிநீரில் குளோரின் அளவு சரியாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் திடீர் ஆய்வு மேற்கொண்டு குடிநீர் விநியோகம் பணிகளில் தொய்வு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.