ஊத்தங்கரையில் கொமதேக பொதுசெயலாளர் பேச்சு.

68பார்த்தது
ஊத்தங்கரையில் கொமதேக பொதுசெயலாளர் பேச்சு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன், திங்கள்கிழமைதிமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து, கை சின்னத்திற்க்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக ஆண்டுக்கு ஒரு லட்சம் மகளிர் உதவித்தொகை அனைத்து பெண்களாலும் வரவேற்கப்படுகிறது. வரும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும், சென்ற முறை 39 என்பது இந்த முறை 40 ஆக உயரம். பஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். நான் சொன்னது தேர்தல் முடிவில் தெரிந்து விடும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி