காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு

4214பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஆனந்தூர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தை அவரது உறவினரான ரங்கநாதன் என்பவர் வாங்கியதாக தெரிகிறது. அதில் பாண்டுரங்கனின் சகோதரி கல்பனா என்பவர் கையொப்பம் செய்யாமல் பத்திரம் கிரயம் செய்ததாகவும், இதுகுறித்து கல்பனா கடந்த 2018ஆம் ஆண்டு ஊத்தங்கரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு தற்போது விசாரணையில் இருந்துவருகிறது.

இந்நிலையில் ரங்கநாதன், அவரது மகன் பாலமுருகன் மற்றும் அவர் குடும்பத்தார் அந்த நிலத்தில் தண்ணீர் குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை கேட்க சென்ற பாண்டுரங்கன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மகேஸ்வரி, சசிகலா, ஹரிதாஸ், ஜீவிதா, ஜீவா, மோனிகா ஆகியோர் மீது சரமாரியாக கட்டை மற்றும் செங்கற்களால் தாக்கியுள்ளனர். இதில் இரு தரப்பினரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து மண்வெட்டியால் தாக்கப்பட்ட பாண்டுரங்கன் கூறுகையில், என் மீதும்,எனது மனைவியின் மீதும் இதுவரை மூன்று முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். மூன்று முறையும் வழக்குப் பதிவு செய்த போலீசார் பெயரளவுக்கு மட்டுமே விசாரித்து வருகின்றனர். அவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் என்பதால் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலட்சியம் காட்டி வருவதாகவும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி