கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் போச்சம்பள்ளி பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் போச்சம்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. பெய்து வரும் மழையால் சீதோஷ்ண நிலை மாறி குளிர்ச்சி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.