தளி அடுத்துள்ள காலனட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (36) விவசாயி. இவர் டூவீலரில் மதகொண்டப்பள்ளி கக்கதாசம் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவித மாக டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து கீழே கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சதீசை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சதீஷ் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.