கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் ஜல்ஜீவன் மெஷன் திட்டத்தின் கீழ் ரூ. 7 இலட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. இன்று 06. 06. 2024 நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோக பணிகள் மற்றும் குளோரின் அளவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.