நோ வாட்டர், நோ வோட் நோட்டீஸ்களை ஒட்டிய பொதுமக்கள்

2219பார்த்தது
நோ வாட்டர், நோ வோட் நோட்டீஸ்களை ஒட்டிய பொதுமக்கள்
ஓசூர் கேசிசி நகர் பகுதியில் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு மாநகராட்சியின் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படாமல் உள்ளது. குடிநீர் இணைப்பு கேட்டு இங்கு வாழும் பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் கடும் அவதியடைந்த கேசிசி நகர் பகுதியில் வாழும் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து தங்களது வீடுகள் முன்புள்ள கதவுகளில் நோ வாட்டர், நோ வோட் என ஆங்கில மொழியில் எழுதப்பட்ட நோட்டீஸ்களை ஒட்டியுள்ளனர். இதுகுறித்து அறிந்த அட்கோ போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் கேசிசி நகர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி