கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அடுத்துள்ள தொட்டதிம்மன அள்ளி அருகே தின்னூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ஜெயந்தி (34) சம்வம் அன்று ஜெயந்தியை அவரது கணவர் மாந்தோப்புக்கு தண்ணீர் பாய்ச்ச மோட்டாரை போடும்படி கூறியுள்ளார்.
அவர் மறுத்த நிலையில் அவர்கள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஜெயந்தி வீட்டில் தூக்கிட்டுக்கொண்டார். இதை பார்ந்த உறவினர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு. அங்கு சிகிச்சை பலன் இன்றி ஜெயந்தி உயிரிழந்தார். இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.