பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் தேர்தல் பிரச்சாரம்

70பார்த்தது
பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் தேர்தல் பிரச்சாரம்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆர். விஜயகுமார் தலைமையில் ஓசூர் உழவர் சந்தையில் பொதுமக்களை சந்தித்து கிருஷ்ணகிரி பாராளுமன்ற பாஜக வேட்பாளர் திரு. நரசிம்மனை ஆதரித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் கொடுத்து, மேளதாளத்தோடு வாகனத்தில் பிரசாரம் செய்யப்பட்டது. தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இதில் ஓசூர் பார் அசோசியேஷன் தலைவர் ஆனந்தகுமார், மாவட்டத் துணைத் தலைவர் பிரபாகர், மாவட்ட செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், முருகன், கோகிலா, மற்றும் ஓசூர் மாநகர தலைவர் நளினி, அகிலா, மோகன் பாபு, ரவிச்சந்திரன் மற்றும் நரேந்திர ரெட்டி, கோவிந்தராஜன், லக்ஷ்மையா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி