பாஜக வேட்பாளரை ஆதரித்து மத்திய மந்திரி வாக்கு சேகரிப்பு.

58பார்த்தது
பாஜக வேட்பாளரை ஆதரித்து மத்திய மந்திரி வாக்கு சேகரிப்பு.
கிருஷ்ணகிரி பாராளு மன்ற தொகுதியில் பாஜக சார்பில் அக் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் போட்டியிடுகிறார். அவருக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வாக்குகளை சேகரித்தார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் உலகம் முழுதும் தமிழ் கலாச்சாரம் பரப்ப பட்டுள்ளது. உலக புகழ் பெற்ற தமிழ் கலாச்சாரம் பாதுகாக்கவும், போற்றப்படவும் வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார். ஐக்கிய நாடுகள்சபையில்தமிழில் பேசினார். தேர்தல் அறிக்கையில் கூடதமிழக கலாச் சார மையங்கள் அமைக்க படும் என்று அறிவித்துள்ளர். தமிழகத்திற்கு பல்வேறு சிறந்த திட்டங்களை வழங்கி உள்ளது. ஒரு குடும்ப அரசியல் காரணமாக ஊழல் நிறைந்து தமிழகம் வளர்ச்சியில் பின் தங்கி உள்ளது. ஊழல் செய்த திமுகவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி வைத்து கொண்டு வாக்கு சேகரிக்கிறது. ஆனால் மக்கள் தெளிவாக உள்ளனர். ஊழல் செய்த கட்சிகளை புறக்கணிக்க தயாராகி விட்டனர். தேசிய அள வில் வளர்ச்சியினை கொண்டு வரும் பாஜக விற்கு வாக்களிக்க வேண்டும். பாஜக எப்போதும் பெண்களை மதிப்பதுடன் உரிய வாய்ப்புகளை வழங்கி வருகிறது என்று பேசினார்.

தொடர்புடைய செய்தி