கிருஷ்ணகிரி: ஸ்ரீ பாதாள பிரத்தியங்கா காளி கோவில் மஹா கும்பாபிஷேகம்

51பார்த்தது
கிருஷ்ணகிரி: ஸ்ரீ பாதாள பிரத்தியங்கா காளி கோவில் மஹா கும்பாபிஷேகம்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள ஜெகதாப் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ அதர்வன பத்ரகாளி என்று அழைக்கப்படும் ஸ்ரீமங்கள மஹா பாதாள பிரத்தியங்கிரா காளி திருக்கோவில் மஹா குப்பாபிஷேக விழா 3 நாள்கள் நடைப்பெற்றது.

 சிவாச்சாரியர்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட பூரணகும்ப கலசங்களின் கடம்புறப்பாடு நடைப்பெற்றது. பின்னர் திருக்கோவிலில் கோபுர கலசம் மற்றும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும், இராஜ கோபுரமாக கருவறை அமைக்கப்பட்டு மிக பிரமாண்டமான முறையில் காட்சியளிக்கும் ஸ்ரீ மங்கள மஹா பாதாள பிரத்தியங்கிரா காளிக்கு புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றி மஹா பிரதிஷ்டையுடன் குப்பாபிஷேகம் வேத மந்திரங்களுடன் புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி