பாராளுமன்றகாங்கிரஸ் வேட்பாள கோபிநாத் வாக்கு சேகரிப்பு

55பார்த்தது
கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோபிநாத்
கை சின்னத்தில் போட்டியிட்டுள்ளார்,
இதில் கை சின்னத்தில் போட்டியிட்டுள்ள
கோபிநாத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்,
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிட்டுள்ள
கோபிநாத்தினை ஆதரித்து
இந்தியா கூட்டணியினர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் தீவிரமாக வாக்கு சேகரித்தனர்,
அப்போது சோமார்பேட்டை கிராமத்திற்கு வந்த காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ராஜா தலைமையில் கிராம மக்கள் பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்ததுடன் பெண்கள் மலர் தூவி வரவேற்றனர்.
பின்னர் கிராம மக்களிடம் உரை ஆற்றிய இந்தியா கூட்டணியின் தேர்தல் பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன்
ராகுல் காந்தியின் தலைமையிலான நல்லாட்சி அமைய வேண்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை துண்டு பிரசுரங்களாக வழங்கி கை சின்னத்தில் போட்டியிட்டுள்ள கோபிநாத்தினை வெற்றிப்
பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்,
மேலும் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை விரும்பி
மற்றும் திமுகவை சேர்ந்த ஒன்றிய செயலாளர் தனசேகரன், பொதுக் குழு உறுப்பினர் அஸ்லாம் உள்ளிட்ட
ஏராளமானவர்கள் கலந்துக்
கொண்டனர்.

தொடர்புடைய செய்தி