பெரிய மாரியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு அலங்காரம்

585பார்த்தது
கிருஷ்ணகிரியில் ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு - கருவறை முழுவதும் பணத்தால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அம்மன் ஆசி வழங்கினார்.
.

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நள்ளிரவு முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆலயங்கள் தேவாலயங்கள் போன்றவற்றில் சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் பிரார்த்தனைகள் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி சென்னை சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சின்ன மாரியம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நள்ளிரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அம்மன் கருவறை முழுவதும் 50 ரூபாய் 100 ரூபாய் 200 ரூபாய் 500 ரூபாய் ஆகிய ரூபாய் நோட்டுகள் மூலம் அலங்கரிக்கப்பட்டு அதன் நடுவே ஸ்ரீ சின்ன மாரியம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்து ஆசி வழங்கினார்.

நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை அருள் பெற்று செல்கின்றனர் புதிய ஆண்டு வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி இன்பங்கள் பெருகவும் உலக அமைதி வேண்டியும் அவனை வணங்கி வருகின்றனர்.

டேக்ஸ் :