ஓசூரில் வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் நகைகள் திருட்டு

3649பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி பகுதியில் லுக் இந்தியா தொழிற்சாலை எதிரே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான ஒரு வீட்டில் கேரளாவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் ராதாகிருஷ்ணனின் மனைவியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெறுவதற்காக அவர்கள் சொந்த ஊரான கேரளா மாநிலத்துக்கு சென்றுள்ளனர்.

சில நாட்களாக ஆளில்லாமல் பூட்டி இருந்த வீட்டை நோட்டமிட்ட சில மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 40 சவரன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். மேலும் வெள்ளிப் பொருட்களை எடுத்து அருகே உள்ள ஒரு குளத்தில் வீசி சென்றுள்ளார்.

இது தொடர்பாக காவல் துறையினருக்கு கொடுத்ததின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கொள்ளை நடந்த வீடுக்கு சென்று வீட்டின் உரிமையாளர் ராதாகிருஷ்ணனிடம் விசரனை மேற்கொண்டதில் வீட்டின் அலமாரி பொருட்களை சேதப்படுத்தியும், பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகைகள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி