பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சிநரசிம்மன் வாக்கு சேகரித்தார்

74பார்த்தது
ஊத்தங்கரை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி. நரசிம்மன் வாக்கு சேகரித்தார்.

கிருஷ்ணகிரி, ஏப். 4- கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் சி. நரசிம்மன் ஊத்தங்கரை தொகுதியில் உள்ள எக்கூர், மங்கனூர்பட்டி, கோவிந்தாபுரம், பெரிய தள்ளப்பாடி, சிங்காரப்பேட்டை, வெள்ளகுட்டை, அத்திப்பாடி, நாயக்கனூர், நடுப்பட்டி, பாவக்கல், கொட்டுமாரம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி, கொண்டம்பட்டி, ரெட்டிப்பட்டி, ஊத்தங்கரை டவுன் உள்ளிட்ட பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜசேகர், ஊத்தங்கரை நகர செயலாளர் பாஸ்கர், தொகுதி பொறுப்பாளர் எம். ஆர். ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் கவியரசு உள்பட ஏராளமான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி மாவட்ட, மாநில நிர்வாகிகள் தாமரைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி