விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

80பார்த்தது
விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் எலுமிச்சங்கிரியில் உள்ள ஐ. சி. ஏ. ஆர். வேளாண்மை அறிவியல் மையம் புதிய வேளாண்மை சாகுபடி தொழில்நுட்பங்களை விசாயிகளிடம் கொண்டு செல்லும் வகையில் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் காவேரிப்பட்டணம் அடுத்த பாப்பாரப்பட்டி பகுதியில் ஆதிதிராவிடர் நலத் திட்டத்தில் உழவர் விழா மற்றும் இடு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் தலைமை தாங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் நாட்டுக்கோழி, எலுமிச்சை செடிகளும், தென்னை மரம் ஏறும் கருவியும், சிறுதானிய சாகுபடி தொழில்நுட்ப புத்தகமும் வழங்கப்பட்டன. இதில் பாப்பாரப் பட்டி, வாடமங்கலத்தைச் சேர்ந்த 192 விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you