ஓசூர் அருகே..நகர் முழுவதும் ஊர்வலம்..வீடியோ!

3989பார்த்தது
ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீஐயப்ப சுவாமியின் 56 ஆம் ஆண்டு மண்டல பூஜை விழா நடைபெற்றது. முன்னதாக இந்த கோயிலில் கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களும் அதனைத்தொடர்ந்து ஸ்ரீஐயப்ப சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகா மங்கள ஆர்த்தியும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஸ்ரீ ஐயப்ப சுவாமி அமர வைக்கப்பட்டு பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. செண்டை மேளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் ஊர்வலம் தேன்கனிக்கோட்டையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது இதில் பக்தர்கள் ஏராளமானோர் பஜனைகளை பாடி சென்றனர். இந்த ஊர்வலத்தில் பொதுமக்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்து சென்றனர்.

மண்டல பூஜையில் ஒரு பகுதியாக வரும் திங்கட்கிழமை கோயிலில் மகரஜோதி சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி