இந்து முன்னணி சார்பில் வரும் 4 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

58பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை நகர இந்து முன்னணி சார்பில் நகர செயலாளர் கோபி தலைமையில் குளித்தலை காவல் ஆய்வாளரிடம் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் குளித்தலை தைப்பூசத் திருநாளை ஒட்டி கடம்பன் துறையில் தைப்பூச பெருவிழா ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தற்சமயம் கடம்பவனேஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேக பணி நடைபெறுவதை காரணம் காட்டி தைப்பூச பெருவிழாவிற்கு கரூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. இங்கு இயங்க கூடிய ஆகம பாடசாலை தலைமை குருநாதர் மற்றும் கோயில் சிவாச்சாரியர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக தைப்பூசத்திற்கு தடைவிதித்த கரூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து வருகின்ற 4 ஆம் தேதி மாலை 5 மணிக்கு குளித்தலை காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த நிகழ்வில் இந்து வழக்கறிஞர் முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சரவணன், இந்து முன்னணி குளித்தலை நகர துணைத் தலைவர் தியாகராஜன், செயற்குழு உறுப்பினர் ராஜாமணி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.