அதிமுக- தங்கவேல் 5, 16, 000- ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி.

575பார்த்தது
அதிமுக வேட்பாளர் தங்கவேல் 5 லட்சத்து 16 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி. அறிவிப்பு செய்த தலைமைக் கழக பேச்சாளர் கோபி- காளிதாஸ்.

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தங்கவேலுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரம் கரூர் - கோவை சாலையில் உள்ள கே எஸ் மெஸ் அருகே நடைபெற்றது.

இந்த பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், சின்னசாமி மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் கோபி- காளிதாஸ், மிமிக்ரி செய்தவாறு தனது பேச்சை தொடர்ந்தார்.

அப்போது டிவி நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பது போல செய்தி வாசித்தார்.

அப்போது, கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தங்கவேலுவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதி மணியை விட 5 லட்சத்து 16 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அவர் கூறிய தேர்தல் செய்தி அறிக்கையில் தெரிவித்தார்.

இதனைக் கேட்டு அங்கு கூடியிருந்த ஏராளமானோர் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி