பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ஆட்சியர் ஆய்வு.

52பார்த்தது
கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏமூர் ஊராட்சியில் செயல்படும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று (செப்.19) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து சேகரிக்கப்படும் பால் முறையாக கையாளப்படுகிறதா? பால் கொள்முதல் செய்யும் போது தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா?

பால் விநியோகம் செய்யும் விவசாயிகளுக்கு உரிய தொகை முறையாக வழங்கப்படுகிறது? என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

மேலும் கூட்டுறவு சங்கத்தில் பால் பராமரிக்கும் இடம் தூய்மையாக வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்த ஆட்சியர் தங்கவேல், பால் விநியோகம் செய்யும் விவசாயிகளிடம் அவர்களது குறைகளை குறித்து கேட்டு அறிந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர், அரசு துறை அதிகாரிகள், ஏமூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி