132 மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார் MLA

65பார்த்தது
132 மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார் MLA
132 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில், மாவட்ட கல்வி அலுவலர் காமாட்சி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, பள்ளியின் தலைமை ஆசிரியர் ரத்தினம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மணிவண்ணன், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி தலைவர் சேது மணி மகாலிங்கம், பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் மாரியாயி, உதவி தலைமை ஆசிரியர் ராஜசேகரன் உள்ளிட்ட கலந்து கொண்ட இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கிருஷ்ணாயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, இந்த பள்ளியில் பயிலும் 65 மாணவர்கள், 67 மாணவிகள் என 132 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி