காலை உணவு திட்டம்- ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர்

71பார்த்தது
தமிழக அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் செயல்படுத்தியது.

இந்தத் திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக அளிக்கப்படுகிறதா? என்பது குறித்து அறிய மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று, (செப்.19) கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏமூர் புதூர் பகுதியில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி