48வது பிறந்த நாளை கொண்டாடிய விசிக மாவட்ட செயலாளர் புகழேந்தி.

60பார்த்தது
வையாபுரி நகரில் 48வது பிறந்த நாளை கொண்டாடிய விசிக மாவட்ட செயலாளர் புகழேந்தி.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வருபவர் வழக்கறிஞர் புகழேந்தி.

இன்று அவரது 48 வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் வையாபுரி நகர், நான்காவது கிராஸ் பகுதியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் மண்டல துணைச் செயலாளர் ராசா என்கிற கண்ணன், பரமத்தி ஒன்றிய செயலாளர் ஆனந்தராஜ், கரூர் ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ், முன்னாள் கரூர் ஒன்றிய துணை செயலாளர் சதீஷ்குமார், மேற்கு ஒன்றி செயலாளர் செல்லதுரை, தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் குப்பம் ஜெகதீசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் புன்னம் ஜெயக்குமார், மகளிர் அணி அமைப்பாளர் அன்னபூரணம் மாநகர பொருளாளர் முரளி, மகாகவி மாற்றுத்திறனாளிகள் நலச் சங்க தலைவர் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, வழக்கறிஞர் புகழேந்திக்கு மலர் மாலை அணிவித்து, பொன்னாடைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கேக் வழங்கி நன்றி தெரிவித்தார் வழக்கறிஞர் புகழேந்தி.

டேக்ஸ் :