வாக்காளர் அட்டையை ஒப்படைக்க வந்த போக்குவரத்து ஓய்வூதியர்கள்

66பார்த்தது
வாக்காளர் அட்டையை ஒப்படைக்க வந்த போக்குவரத்து ஓய்வூதியர்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 101 மாத அகவிலைப்படி உயர்வினை வழங்க கோரி பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படாததால் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நலமீட்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தசரத ராமன் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

மேலும், கோரிக்கையை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளை கண்டிக்கும் வகையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என வாக்காளர் அட்டைகளை வழங்குவதாக கூறியதால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை மனு சென்றால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கோரிக்கை மனுவினை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த புகார் பெட்டியில் செலுத்தி விட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல மீட்பு சங்கத்தின் மண்டல தலைவர் சக்திவேல், மண்டல செயலாளர் சௌந்தர்ராஜன், மண்டல பொருளாளர் லட்சுமணன், உள்ளிட்ட 150 ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி