கரூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக தங்கவேல் அறிவிப்பு

6283பார்த்தது
கரூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக தங்கவேல் அறிவிப்பு
கரூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் தங்கவேல் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் கலைக்கட்ட தொடங்கியுள்ளது.. குறிப்பாக முதல் கட்டமாக தேர்தல் நடக்கும் தமிழகத்தில் அதற்கான முன் ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கரூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளரும், கரூரில் அருண் டெக்ஸ் என்ற பெயரில் டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வரும் தங்கவேல் வேட்பாளராக அறிவித்து உள்ளனர்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தங்கவேலுக்கு அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், தங்கவேலுக்கு அலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி