செங்குந்தர் மகாஜன சங்க புதிய பொறுப்பாளர்கள் தேர்வு.

58பார்த்தது
தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க புதிய பொறுப்பாளர்கள் தேர்வு.

கரூர் மாவட்டம், வெங்கமேடு, மனோரஞ்சிதம் திருமண மண்டபத்தில், தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிர்வாகிகள் தேர்வுக்கான தேர்தல் அதிகாரியாக மாநகராட்சி உறுப்பினர் ஸ்டீபன் பாபு கலந்து கொண்டு செயல்பட்டார்.

நிகழ்ச்சி கூடியதும் அனைவரும் ஒற்றுமை உணர்வோடு செயல்பட வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இன்று நடைபெற்ற தேர்வில், புதிய தலைவராக பாஸ்கரும், செயலாளராக தவமணி சேனாவும், பொருளாளராக மாங்கல்யம் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினராக பேராசிரியர் மோகன் கந்தசாமி மற்றும் மகேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும், தேர்தல் அதிகாரி ஸ்டீபன் பாபு வாழ்த்து கூறினார்.

தேர்வு செய்யப்பட்ட புதிய பொறுப்பாளர்கள், இன்று முதல் 2026 வரை செயல்படவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி