கபசுபதீஸ்வரர் ஆலயத்தில் சமத்துவ மக்கள் கழகத்தினர் அன்னதானம்

67பார்த்தது
கரூர் மாட வாளகத்தில் உள்ள ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சமத்துவ மக்கள் கழகத்தின் 9ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு, மார்ச் 11ஆம் தேதி திங்கட்கிழமை காலை 8: 30 மணியளவில், சமத்துவ மக்கள் கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார் தலைமையில், சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்ட அவைத் தலைவர் வி. எஸ். மணி, மாவட்ட நாடார் பேரவை தலைவர் எம். சுரேஷ், சமத்துவ மக்கள் கழகத்தின் கரூர் மாவட்ட துணைச் செயலாளர் ஜி. வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் எம். முருகன், கரூர் ஒன்றிய செயலாளர் கே. பாஸ்கர், கரூர் நகர செயலாளர் என். பாலசுப்பிரமணி துணைப் பொருளாளர் என். மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் , சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவரும், பனை நல வாரியத்தின் தலைவருமான முன்னாள் எம்எல்ஏ எர்ணாவூர் நாராயணன் பெயரில் சிறப்பு அபிஷேகமும், பொதுமக்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பேட்டி அளித்த, சமத்துவ மக்கள் கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார், இன்று ஒன்பதாம் ஆண்டு கட்சியின் துவக்க விழாவை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அபிஷேகமும் அன்னதானமும் நடைபெற்றது என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி