விசிக சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

61பார்த்தது
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க புரட்சியாளர் அம்பேத்கரின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ திருநாள் தமிழக முழுவதும் விசிக சார்பில் கொண்டாடப்பட்டது கரூர் மாவட்டம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மனோகரா கார்னர் பகுதியில், மாநகர மாவட்ட செயலாளர் கராத்தே இளங்கோவன் தலைமையில் புரட்சியாளர் அம்பேத்கர் தெரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அக்னி இல அகரமுத்து, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தில்லை தீபக்குமார், கரூர் நகர செயலாளர் முரளி, என்கிற பாலசிங்கம் நகர பொருளாளர் ரகுமான், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் பசுவை ரஞ்சித் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி