கோரிக்கையை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆட்சியரிடம் மனு.

78பார்த்தது
கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளிகள்.


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அன்பு மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் அன்பழகன் தலைமையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 50க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


அந்த மனுவில், தமிழகத்தில் செயல்படும், அனைத்து அரசு கல்லூரிகள், 23 பல்கலைக்கழகங்கள், 163 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் மொத்த பேராசிரியர்கள் & உதவி பேராசிரியர்களை கணக்கிட்டு, அதில் ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு SLET, NET- தேர்வுகளில் தேர்ச்சி அடைந்து, பணி வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் 300- பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி பேராசிரியர் பணி வழங்க வேண்டும்.

உச்சநீதிமன்ற ஆணையின்படி, மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையை பின்பற்றி, தமிழக அரசும் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.

பார்வையற்ற அரசு பணியாளர்களுக்கு, புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க வேண்டும். உள்ளிட்ட 9- அம்ச கோரிக்கைகளை வலுயுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் , ஆட்சியர் தங்கவேல்-ஐ சந்தித்து மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், மாற்றுத்திறனாளிகளுக்காக சட்டத்தில் உள்ள விதிகளின்படி, தேவையான உதவிகளை செய்ய ஆவண செய்வதாக தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி