வேப்பம்பாளையத்தில் அரசு பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.

70பார்த்தது
வேப்பம்பாளையத்தில் டூவீலரில் சென்றவர் மீது அரசு பேருந்து மோதி உயிரிழப்பு.

கரூர் மாவட்டம், பவித்திரம் அருகே உள்ள சாலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி வயது 42.

இவர் ஜூன் 4-ம் தேதி காலை 11: 30 மணியளவில், கரூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

இவரது வாகனம் வேப்பம்பாளையம் பகுதியில் உள்ள சரவணா மெஸ் அருகே சென்றபோது, அதே சாலையில்,
TN 45 N 3890 என்ற எண் கொண்ட அரசு பேருந்து வேகமாகச் சென்று, சுப்பிரமணி ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அறிந்த சுப்பிரமணியின் மனைவி நவலட்சுமி வயது 36 என்பவர் அளித்த புகார் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பின்னர் உயிரிழந்த சுப்பிரமணியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் பேருந்தை ஓட்டி, விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி