புத்தாண்டு-120அடி உயர கோபுரத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு

61பார்த்தது
புத்தாண்டு-120அடி உயர கோபுரத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு
கரூரில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 120 அடி உயர கோபுரத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.


கரூரில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனுறையாகிய கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமிக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.

ஆண்டுதோறும் புத்தாண்டை முன்னிட்டு ராஜகோபுரத்திற்கு மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து இன்று புத்தாண்டை முன்னிட்டு
ராஜகோபுரத்திற்கு 120 அடி உயர மலர் மாலை தயார் செய்து, கோவிலுக்கு எடுத்து வந்தனர்.


பின்னர் அந்த மாலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்கள் தங்கள் கைகளிலும் தோள்களிலும் சுமந்து
ராஜகோபுரத்தின் மீது நீண்ட மலர் மாலையை ஏற்றினர்.

120 அடி உயர கோபுரத்திற்கு அதற்கேற்றவாறு, மாலை தயாரித்து, கோபுரத்திற்கு மாலை அணிவிக்கப்பட்ட பிறகு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


உயர்ந்து நிற்கும் கோபுரம் போல, தங்கள் வாழ்விலும் பல உயரங்களை எட்டிப் பிடிக்க, இறைவன் துணை நிற்க வேண்டும் என மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.



இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி