கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சங்க மாநில செயற்குழு கூட்டம்.

67பார்த்தது
கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சங்க மாநில செயற்குழு கூட்டம்.
கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்கம் மற்றும் இளைஞர் அணி சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சியினரும், சமுதாய அமைப்பினரும் தேர்தலில் தங்கள் பங்களிப்பு குறித்து வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் இன்றுகரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள தனியார் கூட்ட அரங்கில், கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்கம் மற்றும் இளைஞரணி சார்பில், மாநில செயற்குழு கூட்டம் நிறுவனத் தலைவர் வாழவந்திநாடு சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் ரவிக்குமார், பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, மாநில துணைத்தலைவர் தென்னரசு, தொழில் நுட்ப அணியை சேர்ந்த விக்னேஷ், மகளிர் அணியினர் என மாநில அளவிலான பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சங்க வளர்ச்சி குறித்தும், வரும் நாடாளுமன்ற தேர்தலில், கொங்குநாடு வேட்டுவக் கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்கத்தின் பங்களிப்பு குறித்தும், பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி