கரூரில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

4442பார்த்தது
கரூரில் போதைப் பொருளுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது குறித்து, அண்மையில் முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சார்பில் ஆளுநர் ரவியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பதை கண்டித்து, அதிமுக சார்பில் மனிதசங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று கரூர் மாவட்ட அதிமுக சார்பில், கரூர் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் இன்று மனித சங்கிலிப் போராட்டங்கள் நடைபெற்றது.

கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம். ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் கரூர் மாநகரில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஜவஹர் பஜார் முதல் கோவை சாலை வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிமுகவினர் போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :