ஜாதகம் பார்த்து சுருக்கமாக பலன்களை அறிவது எப்படி- நிபுணர்

68பார்த்தது
ஜாதகம் பார்த்து சுருக்கமாக பலன்களை அறிவது எப்படி- ஜோதிட நிபுணர் விளக்கம்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட ராமகிருஷ்ண புரத்தில் உள்ள தனியார் கூட்டரங்கில், 522 வது ஜோதிட ஆராய்ச்சி பேரவை சார்பில், ஜோதிட நிபுணர் ஜோதிஷ வித்யாசாகர் பாஸ்கர் தலைமையில் ஜாதகம் பார்த்து, சுருக்கமாக பலன்களை அறிவது எப்படி என்பது குறித்த பயிற்சி நடைபெற்றது.

நேற்று மதியம் 2 மணி அளவில் துவங்கி, இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்த ஜோதிட ஆராய்ச்சி நிகழ்வில், ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 32 இருபால் ஜோதிடர்கள் பங்கேற்றனர்.

நேற்றைய நிகழ்ச்சியில் நாவாம்சம் முறையில் பலன்கள் அறிவது எப்படி? என்ற தலைப்பில் ஜோதிட முனைவர் விளக்கம் அளித்தார்.

இதில் ராசி, சக்கர லக்கனம், கிரகம் போன்றவற்றில் நாவாம்சத்தின் நிலை பலன்கள், கோச்சாரம், புஷ்கர நவாம்சம் குறித்தும், வெவ்வேறு கிரக நாவாம்சங்களில் கிரகங்கள் நிற்பதால் ஏற்படும் பலன்கள், முக்கிய காலங்கள், திருமண நிலைகள், ஆயுள் நிலைகள் குறித்த நிலைப்பாடுகளை அறிய ஷார்ட் கட் என்னும், சுருக்கமாக பலன்கள் அறிவது எப்படி என்பது குறித்தும், 2024 ஆம் ஆண்டில் கிரக நிலைகள் அமைப்பு குறித்தும், மனித சமுதாயத்தில் கிரகங்கள் ஏற்படுத்த உள்ள தாக்க நிலை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

டேக்ஸ் :