கரூரில் ஆட்டோ மோதி துணி வியாபாரி படுகாயம்

81பார்த்தது
கரூரில் ஆட்டோ மோதி துணி வியாபாரி படுகாயம்
கரூர் பரமத்தி வேலூர் நெடுஞ்சாலை அமைந்துள்ள ரத்தினம் சாலை பிரிவு பகுதியில், யமஹா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த, ஈரோடு சிவகிரியைச் சேர்ந்த மின்னல்பாளையம் பகுதியைச் சேர்ந்த துணி வியாபாரி குப்புசாமி மகன் சேகர் வயது 50 என்பவர் மீது, எதிர்திசையில், வந்த ஆட்டோ ஒன்று, மோதியதில் தலை மற்றும் வலது கால், வலது கையில் படுகாயம் ஏற்பட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து தொடர்பாக சேகரின் மனைவி ஜோதிமணி, கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில், கரூர் மணவாடி கத்தாளப்பட்டி ராஜலிங்கம் மகன் செல்வராஜ் என்ற ஆட்டோ டிரைவர் மீது இரண்டு பிரிவுகளில் கரூர் நகர சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சசிகுமார் வழக்கு பதிந்து டிசம்பர் 31ம் தேதி விசாரணை நடத்தி வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி