தபால் வாக்கு செலுத்திய காவலர்கள் & ஊர் காவல் படையினர்.

71பார்த்தது
வரிசையில் நின்று தபால் வாக்கு செலுத்திய காவலர்கள் மற்றும் ஊர் காவல் படையினர்.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் மற்றும் ஊர்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

தேர்தல் நாள் அன்று இவர்கள் பணி முக்கியத்துவம் பெறுவதால், அன்றைய தினம் இவர்கள் வாக்கு செலுத்த வாய்ப்பு இல்லை.

இதனால், முன்கூட்டியே அவர்களுக்கு தபால் வாக்கு செலுத்துவதற்கான ஏற்பாடுகள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதனால், கரூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பணி மேற்கொள்ளும் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் 1020 பேரும், ஊர்காவல் படையினர் 233 பேர் என மொத்தம் 1253 பேர் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.


இதன் அடிப்படையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர், ஊர்காவல் படையினர் இன்று வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

வாக்கு செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தேர்தல் அலுவலர்கள் செய்திருந்தனர்.