சிறுநீரக கோளாறால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளம் பெண்.

1062பார்த்தது
சிறுநீரக கோளாறால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளம் பெண்.
சிறுநீரக கோளாறால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளம் பெண்.

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை அருகே, குமரன் சாலை 2-வது தெருவை சேர்ந்தவர் பிரபாகர் மனைவி சாந்தி வயது 33.


இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி திருமணம் ஆனது. ஆயினும், இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த சாந்தி, அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் மார்ச் 18 ஆம் தேதி அதிகாலை 2. 30 மணி அளவில் திடீரென மீண்டும் அவருக்கு சிறுநீரகத்தில் அதிக வலி ஏற்பட்டதால், உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆயினும், சிகிச்சை பலனின்றி சாந்தி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அறிந்த சாந்தியின் தாயார் தங்கமணி வயது 60 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, உயிரிழந்த சாந்தியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக, கரூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி