போக்குவரத்து அதிகாரி விரோத போக்கு கண்டித்து வாயில் கூட்டம்.

76பார்த்தது
போக்குவரத்து நிர்வாக இயக்குனர் மண்டல பொது மேலாளர் சங்க விரோத போக்கை கண்டித்து வாயில் கூட்டம்.


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, திருமா நிலையூர் பகுதியில் செயல்படும் கும்பகோணம் கோட்ட போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மற்றும் கரூர் மண்டல பொது மேலாளர் தொழிற்சங்க விரோத போக்கை கண்டித்து கண்டன வாயிற் கூட்டம் (டி யு சி ஐ) செந்தாரகை அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்றது.


இந்த வாயில் கூட்டம் மாநில தலைவர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய பொது செயலாளர் மனசையா சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் செந்தாரகை சங்க சட்ட ஆலோசகரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான முத்து கணேஷ் பாண்டியன், தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை மாநில துணைத்தலைவர் பொன். இளங்கோவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு, நிர்வாக இயக்குனர் மற்றும் கரூர் மண்டல பொது மேலாளரின் தொழிற்சங்க விரோத போக்கை கண்டித்து கண்டன உரைகளை நிகழ்த்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி