இணைப்புசக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கிய ஆட்சியர்

61பார்த்தது
மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கிய ஆட்சியர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

கடந்த மார்ச் மாதம் முதல், நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி திங்கள்கிழமை நடைபெறும் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, அதற்கு மாற்றாக பொதுமக்கள் தங்களது குறைகளை அதற்கென அமைத்துள்ள பெட்டியில் போடும் ஏற்பாடுடன் நடைபெற்று வந்தது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் விளக்கிக் கொள்ளப்பட்ட பிறகு, இன்று நடைபெற்ற முதல் வாராந்திர குறைதீர் கூட்டத்தில், ஏற்கனவே விண்ணப்பம் அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டரை இன்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட தனி துணை ஆட்சியர் சைபுதீன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி