அரசு பேருந்து மோதி இளைஞர் படுகாயம் போலீஸ் வழக்கு பதிவு

2597பார்த்தது
கரூர் சின்னதாராபுரம் நெடுஞ்சாலை அமைந்துள்ள விஸ்வநாதபுரி பிரிவு அருகே உள்ள அக்சரா ஃபேப்ரிக் அருகே ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தில், சென்ற பெரியதாதம்பாளையம் மாணிக்கம் மகன் கார்த்திக் வயது 27 என்பவர் மீது, எதிர்திசையில் வந்த டி என் எஸ் டி சி அரசு பேருந்து, மோதியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கார்த்திக் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து தொடர்பாக கார்த்திக்கின் தந்தை மாணிக்கம் , க. பரமத்தி காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் தில்லைக்கரசி, அரசு பேருந்து ஓட்டுநர் ஆதன் என்பவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிந்து ஜனவரி 1ம் தேதி விசாரணை நடத்தி வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி