கனகா நகரில் கஞ்சாவை பதுக்கிய இளைஞர் கைது செய்து சிறையில் அடைப்பு.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக காவல் உதவி ஆய்வாளர் ராஜசேர்வைக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் நவம்பர் 3-ம் தேதி மதியம் 12 மணி அளவில் அரவக்குறிச்சி
கனகா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியில் உள்ள புற்றுக்கண் கோவில் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இது குறித்து மேற்கொண்ட விசாரணையில், கஞ்சாவை பதுக்கியவர் அரவக்குறிச்சி, பாவா நகர் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் மகன் முகமது இம்மதியாஸ் வயது 28 என்பது தெரிய வந்தது.
எனவே பதுக்கி வைத்திருந்த ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, முகமது இம்தியாசை கைது செய்து, நவம்பர் 15 ஆம் தேதி வரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.