சிலம்பம் சுற்றி காங்கிரஸ் வேட்பாளருக்கு வரவேற்பு

1554பார்த்தது
கரூர் மாவட்டம் நன்செய் புகழூர் ஊராட்சி மன்ற அலுவலக முன்பு இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜோதிமணி இன்று மதியம் ஒரு மணி அளவில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

முன்னதாக கட்டிபாளையம் , பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பிரச்சாரம் மேற்கொண்ட போது, சிலம்பம் சுற்றி இரண்டு இளைஞர்கள் ஜோதிமணிக்கு வரவேற்பு அளித்தனர் சிலம்பம் சுற்றி, இளைஞர்களை ஜோதிமணி அரவக்குறிச்சி எம்எல்ஏ உள்ளிட்டோர் பாராட்டினார்.

இந்த பிரச்சாரத்தின் போது, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வி குணசங்கரன் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் மற்றும் வார்டு உறுப்பினர் வைஜெயந்தி உள்ளிட்ட கிளைக் கழக பொறுப்பாளர்கள் இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி