அணையில் நீர்மட்டம் திருப்தி- சோளம் பயிரிட சுறுசுறுப்பு.

67பார்த்தது
அணையில் நீர்மட்டம் திருப்தியாக உள்ளதால், விவசாயிகள் சோளம் பயிரிட சுறுசுறுப்பு.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் அமைக்கப்பட்ட 90 அடி ஆழம் கொண்ட அமராவதி அணையில், இன்று காலை நிலவரப்படி 45. 98 அடியாக நீர் இருப்பு உள்ளது.


ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் கோடை மழை பரவலாக பெய்யும். குறிப்பாக கேரள மாநிலத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் மழையால் அமராவதி அணைக்கு கூடுதல் நீர்வரத்து அமையும்.

இதனை அறிந்த கரூர் மாவட்ட அமராவதி ஆற்று படுகை பகுதிகளில் விவசாயம் மேற்கொண்டு வரும் அரவக்குறிச்சி,
க. பரமத்தி, தான்தோன்றி மலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், தற்போது சோளம் பயிரிடுவதற்காக தங்கள் நிலத்தை சீர்படுத்தி, சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒருவேளை கரூர் சுற்றுவட்டார பகுதியில் கோடை மழை தவறும் பட்சத்தில், அமராவதி அணைக்கு வரும் நீர் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி